Santhosh

Posts Tagged ‘nation growth’

இந்தியா 2020

In INDIA on August 15, 2008 at 3:39 pm

அப்துல்கலாமின் இந்தியா 2020 ஏதோ அணுகுண்டாலும், ராணுவ பலத்தாலும் அடையப்பட வேண்டிய ஒன்று என்றும் அது ஏழைகளுக்கானது அல்ல என்றும் ஒரு திட்டமிட்ட பொய் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. முதலில் கலாம் சொன்ன இந்தியா 2020 என்பது என்ன என்பதை பார்ப்போம்.


“2020
ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மகக்ளின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும். எழுதப்படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100% ஆக வேண்டும்.இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு குறியீடு 127லில் இருந்து 50க்கு உயரவேண்டும்.ஒவ்வொரு இந்தியனும் ஒரு பல்கலைகழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும். கவர்னன்ஸ் திட்டம் மூலம் அரசாங்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் இடையறா மின்சார சப்ளை கிடைக்க வேண்டும்.ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர் கிடைக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கழிவறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்திடல் வேண்டும்.பொறுப்பான செயல்திட்டம் மூலம் தொழிற்சாலைகளை நிறுவி நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.இந்தியாவின் மூலை முடுக்குகளில் இருக்கும் ஏழைகளுக்கும் மருத்துவ வசதி மிகக்குறைந்த செலவில் கிடைக்க செய்திடல் வேண்டும்.மேலே சொன்ன மக்கள் நல திட்டங்களை அடைந்தபின் இந்தியா உலக அமைதிக்கும் பாடுபடல் வேண்டும்.


மேலே சொன்ன திட்டங்களை அடைய ஒவ்வொரு இந்தியனும் பாடுபட வேண்டும். இதுவரை அரசு திட்டங்கள் சென்றடையாத ஏழைகளை நாம் சென்று அடைய முயலவேண்டும்.


விவசாயிகளுக்கு நபார்ட் மற்றும் பல வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களை கடன்சுமையிலிருந்து மீட்க வேண்டும். ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள், பல்கலைகழகங்கள், தொழிற்சாலைகள் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து வேலை செய்து உனவு உற்பத்தி, தானியம் பதப்படுத்துதல், விவசாய உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ் கம்பனிகள் மைக்ரோ கிரெடிட், பயிர் இன்சூரன்ஸ் ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தரவேண்டும்.


கார்ப்பரேட்டுகள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தமது சமுதாய கடமையாக நினைக்கவேண்டும். தொலைதொடர்பு யுகம் என்று நாம் பெருமைகொள்வது உண்மை எனில் இதுவரை அணுகப்படடாத மக்களை நாம் அணுகவேண்டும்


இதுதான்யா கலாம் சொல்லும் இந்தியா 2020.

 

 

Follow

Get every new post delivered to your Inbox.